Urdhav Pooja Vimanam 

நின்ற நிலையில் கடவுளை வழிபடும் முறை

சங்க காலம் தொட்டு கடவுளை வணங்கும் முறையை நம் முன்னோர்கள் பயனுள்ள முறையில் வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் முதன்மையானது ஊர்துவ முறையாகும், இது நின்ற நிலையில் கடவுளை வணங்கும் முறையாகும். 

வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நமக்கான கடமைகள் ஏராளம். காலையில் எழுந்தவுடன் அதற்கான பணிகளும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம்  இறைவனுக்கு பூஜை செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தாலும், நம்மை படைத்த இறைவனுக்காக ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி எளிய முறையில் பூஜை செய்வதும் நம் கடமை தான்.


நாம் இந்த பூஜையைச் செய்வது மட்டுமல்லாமல், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் தெய்வீக வழிபாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் நம் வீட்டு பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை தான்.